பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1200 சந்தன கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மரக்கன்றுகளை வழங்கி நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் லைன்ஸ் சங்க பொறுப்பாளர் எஸ்.கே.ராமமூர்த்தி, மாவட்ட காந்தி ஜெயந்தி தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, முன்னாள் செயலாளர் குமார் டிவி, முன்னாள் பொருளாளர் சபரி ப்ளெக்ஸ் குமார், முன்னாள் நிர்வாக அலுவலர் சந்தோஷ், முன்னாள் பொருளாளர் சங்கர் ஜவான், பிரதீஸ், செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சந்தன கன்றுகள் வழங்கி, அவற்றை முறையாக நட்டு பராமரித்திட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.