பேராவூரணி, மார்ச் 12
பேராவூரணி நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர் மூத்த சிவில் நீதிபதி தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி பேராவூரணி நீதிமன்றத்தில் தலைவர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன், பயிற்சி நீதிபதிகள் சுதர்சன், விஷால்ஆனந்த், வக்கீல் முரளி, சமூக ஆர்வலர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகள், சிவில் வழக்குகள் கிரிமினல் வழக்குகள், 138 என்.ஐ ஆக்ட் மற்றும் இதர வழக்குகள் மொத்தம் 74 எடுத்துக் கொள்ளப்பட்டு 46 வழக்குகளில் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் தீர்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை நிர்வாக உதவியாளர் தேவி, சட்ட தன்னார்வலர் சிந்து ஆகியோர் செய்திருந்தனர்