பேராவூரணி தாலுக்கா கூப்புளிக்காடு கிராமத்தில் அமைந்திருக்கும், ஸ்ரீ மன்மத சுவாமி உயிர் எழுப்பும் திருவிழாவை முன்னிட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்களால் நடத்தப்படும் மாசி மக திருவிழா நிகழ்ச்சி, வருகிற சனிக்கிழமை (15-03-2025) அன்று மாலை, பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூத்தட்டு எடுத்துவரப்பட்டு, ஸ்ரீ ரதி மன்மத சுவாமிக்கு அபிஷேக ஆராதனை விழாவும், அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு, தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் கோவி.தாமரைச்செல்வன் தலைமையில், சமூக முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது செல்போனும் தொலைக்காட்சியுமா? மதுவும் மகளிர் குழுவும்மா? என்னும் தலைப்பில் மாபெரும் இன்னிசை பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் நண்பர்கள், இளைஞர்கள், ரதி மன்மத சுவாமி குரூப்ஸ், அய்யனார் குரூப்ஸ் நண்பர்கள் மற்றும் கூப்புளிக்காடு கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.