பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பேராவூரணி வட்டார கல்வி அலுவலர் கலா ராணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், பேராவூரணி வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், கல்வியாளர் கேவி.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் மற்றும் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்விற்கு பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருமலைச்சாமி, வட்டாட்சியர் சுகுமார், ஆடுதுறை DIET முதுநிலை விரிவுரையாளர்கள் பால்ராஜ் மற்றும் சுபாஷ் சந்திர போஸ், பேராவூரணி மருத்துவர் துரை.நீலகண்டன், திருக்குறள் பேரவை தலைவர் ஆறு.நீலகண்டன், சேது பாவாசத்திரம் துணை காவல் ஆய்வாளர் மனோஜ் குமார், மற்றும் வர்த்தக கழக பொருளாளர் சாதிக் அலி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், ஆசிரியர்கள் ரேணுகா, சுபா, தற்காலிக ஆசிரியர்கள் மலர்விழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்..