குருவிக்கரம்பை ஊராட்சியில் ரூ.41.20 லட்சம் மதிப்பீட்டில் 4 சிறிய பாலம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா - எம்எல்ஏ அசோக்குமார் துவக்கி வைத்தார்

IT TEAM
0

 


தஞ்சாவூர், மார்ச்.23 - 

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 

குருவிக்கரம்பை குஞ்சு தெரு - பள்ளிவாசல் தெரு இணைப்புச் சாலையில் சிறுபாலம் அமைத்தல், தெற்குத் தெரு குடியிருப்புச் சாலையில் சிஎம்பி ஆற்றில் சிறு பாலம் அமைத்தல், தெற்கு தெரு இணைப்பு சாலையில் சிஎம்பி ஆற்றில் சிறுபாலம் அமைத்தல், குருவிக்கரம்பை ஊராட்சி ஐயர் ரோட்டில் உள்ள 5 ஆம் நம்பர் வாய்க்கால் சிறு பாலம் அமைத்தல் ஆகிய பணிகள் தலா ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் என 41 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. 


இந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், ப.இந்திரா, சேதுபாவாசத்திரம் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பாமா செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன், மருங்கப்பள்ளம் சுரேஷ் மற்றும் கிராமப் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top