தஞ்சாவூர், பிப்.28 -
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்து துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரசுப் போக்குவரத்துக் கழகம், பேராவூரணி கிளை சார்பில், பேராவூரணி - கோயம்புத்தூர் புதிய வழித்தடத்தில், புதுக்கோட்டை, திருச்சி வழியாக புதிய பேருந்து மற்றும் பேராவூரணி- கறம்பக்குடி பேருந்து செருவாவிடுதி வழியாக கூடுதல் நடை துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்து, சிறிது நேரம் டிக்கெட் எடுத்து பேருந்தில் பயணித்தார். நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளா் எஸ்.ஸ்ரீதரன், உதவி மேலாளர் (வணிகம்) ஏ.தமிழ்செல்வன், கிளை மேலாளர் கே.மகாலிங்கம், குடந்தை, நாகை மண்டல பொதுச்செயலாளரும், தொமுச பேரவை துணைத் தலைவருமான பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், திமுக ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், நகரச் செயலாளர்கள் சேகர், மாரிமுத்து, முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, சுப.சேகர், கார்த்திகேயன் வேலுச்சாமி, த.பன்னீர் செல்வம், கவிஞர் மா.பழனிவேல், ஆரோ.அருள், பாக்கியம் முத்துவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.