பேராவூரணி, மார்ச் 2
பேராவூரணி அருகே ஆவணம் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
கல்லூரியின் மேனேஜ்மென்ட் ரெப்ரசன்டேடிவ் அஜித்டேனியல் தலைமை வகித்தார். விழாவில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு, தனியார் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி, சிலம்பம், குறும்படம், மற்றும் சிறந்த மாணவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் பார்மசி கல்லூரி முதல்வர் அன்பழகன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மதிவாணன், துணை முதல்வர்கள் கணேசன், லோகநாதன், பரிமளாதேவி, துறை தலைவர்கள், அரசு, தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.