நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும், ஆதனூர் விஜய் மற்றும் ரிஸ்பால் இணையரின் மகன் வி.சீகன்பால் வசந்த், அண்மையில் நடைபெற்று முடிந்த, மன்ற போட்டிகளில், தமிழ் பேச்சுப்போட்டி பிரிவில் தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். சிறு வயது முதலே பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து வரும் சீகன் பால் வசந்த், இந்த சிறப்பு இடத்தைப் பெற்று இருப்பது பேராவூரணி பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் பிரவினா, கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார். சிறப்பு இடங்களைப் பெற முயற்ச்சி மேற்கொண்ட, நாட்டாணிக்கோட்டை வடக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மன்ற போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற நாட்டாணிக்கோட்டை வடக்குப்பள்ளி மாணவர் சீகன் பால் வசந்த்
மார்ச் 03, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க