தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், முகைதீன் ஆண்டவர் ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இஸ்லாமியப் பெருமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பேரைத் துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பழங்கள், பிஸ்கெட், குளிர்பானங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு, ரமலான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில், அறக்கட்டளை தலைவர் விஆர்ஜி.நீலகண்டன், செயலாளர் மகாராஜா, பொருளாளர் எம்.செந்தில்குமார், முகமது முஸ்கிர், முஜிப்பூர் , முன்னாள் நிர்வாகிகள் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, தாமரைச்செல்வன், நாகேந்திர குமார், சண்முகநாதன், ஆசிரியர் கவின், சீனிவாசன், செந்தில்குமார், பேரின்ப முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்களை ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர்.