தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
பள்ளியில் இருந்து துவங்கிய மாணவர் சேர்க்கை பேரணியில், வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அ.காஜா முகைதீன், இடைநிலை ஆசிரியர்கள் சு.சுபா, பெ.ரேணுகா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீ.கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சு.நித்யா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் ஷீலா ராணி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் வெங்கடேசன், ரிஷ்பால், வினோதினி, ம.நிவேதா,
கோ.நிவேதா, ரா.சுஷ்மிதா, கீ.மகிமா, பேபி ராபிகா, ஹேமலதா, இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னார்வலர் சினேகா கலந்து கொண்டு, குடியிருப்பு பகுதிகளான அண்ணா நகர் பகுதி வரை சென்று, அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்களை கூறி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினர்.