பேராவூரணி நகர் பகுதியில், பயணிகளின் நன்மைக்காக நிழல் குடை அமைத்து தரவும், சென்ட்ரல் மீடியனில் மின்விளக்கு அமைத்து தரவும் கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலரிடம் நேரில் எழுத்துப்பூர்வமான கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நடைபெற்ற மன்ற கூட்டத்தில் பல்வேறு தேவைகள் குறித்து கோரிக்கை வைத்துள்ளேன். குறிப்பாக, தற்போது வர இருக்கிற கோடை காலத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் பயன்பாட்டிற்காக நிழல் குடை அமைத்து தர வேண்டும் எனவும், இரவில் போதுமான வெளிச்சம் இல்லாத குறையை போக்க வேண்டும் என்ற நோக்கில் சாலையின் நடுவே உள்ள சென்ட்ரல் மீடியனில் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்ற எங்களது நீண்ட கால கோரிக்கையையும் எழுத்துப்பூர்வமாக செயல் அலுவலரிடம் வழங்கி இருக்கிறேன்" என்றார்.
பேராவூரணி நகர் பகுதியில் நிழல் குடை அமைத்து தர கவுன்சிலர் மகாலட்சுமி சதீஷ்குமார் கோரிக்கை
மார்ச் 11, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க