தஞ்சாவூர், ஏப்.2 -
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், திருச்சிற்றம்பலம் நரியங்காடு
ஆர்.வி.என் மஹாலில், ஒன்றிய அவைத்தலைவர் டி.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன் வரவேற்றார்.
கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார், தொகுதி பார்வையாளர் சுப.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மாநில தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏனாதி பாலசுப்ரமணியன், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பி.ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பெருமகளூர் நகரச் செயலர் மாரிமுத்து மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றியத்தில் அனைத்து இடங்களிலும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற பாடுபடுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.