தஞ்சாவூர், ஏப்.2-
தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரியின் மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் (RAWE) திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அருகே கள்ளிக்காடு, வெண்டாக்கோட்டை, அணைக்காடு போன்ற கிராமங்களில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக களக் கண்காட்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்களை நடத்தினர்.
இதில், மாணவர்கள் ல.பிரதீப், கி.பவித்ரன், செ.பிரகாஷ், பா.முகிலன், பா.முத்துக்குமரன், சு.நடராஜன், ச.மொரேஸ், ப.இ.முகமது ஆஸிம் முர்ஷித், உ.முகமது சிமர், ர.மதேஷ்வரன் ஆகியோர் பங்கேற்று, தாங்கள் தயாரித்த மாதிரிகள் மற்றும் விளக்கப் படங்கள் மூலம் விவசாயிகளுக்கு எளிதாக புரியும் வகையில், நவீன மற்றும் இயற்கை வேளாண் முறைகளை எடுத்துரைத்தனர்.
அப்போது,
தென்னை வேர் ஊட்டம், இயற்கை உரங்களை தயாரிக்கும் முறை, தேனீ வளர்ப்பு, உயிரி பூச்சிக்கொல்லிகள்,
உயிரி உரங்கள், பூச்சி கட்டுப்பாட்டு பொறிகள், பஞ்சகவ்யா மற்றும் மீன் அமிலம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
கல்வியில் கற்றுணர்ந்ததை கிராமப்புற விவசாயத்திற்கு கொண்டு செல்லும்
மாணவர்களின் இந்த முயற்சி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.